(கோப்பு படம்)
தமிழகத்தில் இன்று 2,662 பேருக்கு கொரோனா
- கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- சென்னையில் மேலும் 1,060 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்ததால், வழிகாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு, தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 2,662 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,765 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,542- ஆக உள்ளது.
சென்னையில் மேலும் 1,060 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 373 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 137 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 132 பேருக்கும், திருச்சி 112- பேருக்கும், காஞ்சிபுரம் 89 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.