தமிழ்நாடு

குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்வதை காணலாம்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்- குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-07-12 12:24 IST   |   Update On 2023-07-12 12:24:00 IST
  • குற்றால அருவி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
  • லேசான வெயில் மற்றும் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

தென்காசி:

குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றால அருவி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

குற்றாலத்தில் உள்ள முக்கிய விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் விடுதி உரிமையாளர்கள் மற்றும் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலையில் லேசான வெயில் மற்றும் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் குற்றால சாரல் திருவிழா எப்போது தொடங்கும் என சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதத்தில் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் நடைபெறும் குற்றால சாரல் திருவிழாவில் தமிழக கலை பண்பாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சி ஆனது சாரல் திருவிழாவை மேலும் மெருகூட்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Tags:    

Similar News