தமிழ்நாடு

தேமுதிக தலைமையகத்தில் விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம்

Published On 2023-12-28 06:19 GMT   |   Update On 2023-12-28 07:49 GMT
  • நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • 15 நாட்களுக்குப் பின் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரம் உடல் அங்கு வைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரமேலதா மற்றும்  சுதீஷ் ஆகியோர் கையைப்பிடித்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.


இதனிடையே, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக் கழகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News