தமிழ்நாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை: ஐகோர்ட் மதுரைக்கிளை
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை.
- போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது.
மதுரை:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கின் விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்றும் போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது என்றும் கூறினர்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.