தமிழ்நாடு

(கோப்பு படம்)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,316- பேருக்கு கொரோனா

Published On 2022-07-17 21:59 IST   |   Update On 2022-07-17 21:59:00 IST
  • கொரோனா தொற்றில் இருந்து இன்று 2,458 பேர் குணமடைந்தனர்.
  • கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கூடுதலாக 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 17 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 2,458 பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், தொற்று பாதிப்பால் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 135 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் இன்று 596- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News