தமிழ்நாடு

(கோப்பு படம்)

அதிகரிக்கும் கொரோனா- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,025 பேருக்கு பாதிப்பு

Published On 2022-07-01 21:28 IST   |   Update On 2022-07-01 21:28:00 IST
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆவது நாளாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
  • இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 1,321 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதிதாக 2,385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 909 ஆக இருந்த பாதிப்பு இன்று 1,025 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 369 பேரும், திருவள்ளூரில் 121பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவையில் 118பேரும், கன்னியாகுமரியில் 72பேரும், காஞ்சிபுரத்தில் 84 பேரும், திருச்சியில் 67 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. இன்று கொரோனாவில் இருந்து 1,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 ஆயிரத்து 158 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News