ரஜினி நலமுடன் உள்ளார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.
- ரஜினி விரைவில் வீடு திரும்புவார்.
சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார்.
ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.
வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர் என்று கூறினார்.
இதற்கிடையே ரஜினிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.