தமிழ்நாடு
பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நினைவு பரிசு - உதயநிதி ஸ்டாலின்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆறு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இவர்களில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளனர். பதக்கத்தோடு நாடு திரும்பியவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், பதக்கம் வென்று திரும்பியவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடினார்.