அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை- சீமான்
- மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.
- மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ்.
சென்னை:
ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.
* மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ். அவரை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும். ஆனால் என்னை மாநாட்டிற்கு அழைக்கவில்லை.
* 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொல்கிறார். இதற்கு முதல்வரும் ஆமாம் என்று சொல்கிறார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?
* மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை.
* அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது.
* அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.