தமிழ்நாடு

(கோப்பு படம்)

தமிழகத்தில் இன்று புதிதாக 2,223 பேருக்கு கொரோனா

Published On 2022-07-18 21:20 IST   |   Update On 2022-07-18 21:20:00 IST
  • சென்னையில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,223- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,402- ஆகும். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,312 ஆகும். தலைநகர் சென்னையில் இன்று 575- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Tags:    

Similar News