தமிழ்நாடு

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை பதிவு செய்ய 167 மையங்கள்

Published On 2023-03-31 09:01 GMT   |   Update On 2023-03-31 09:01 GMT
  • சென்னையில் 45 ஹால்மார்க் தர மையங்கள் செயல்படுகின்றன.
  • குறைந்த அளவில் மையங்கள் இருப்பதால் அதிகரிக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஹால்மார்க் முத்திரை நகைகள் 26 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை முதல் இது அமல்படுத்தப்பட்டாலும் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் கொண்டுவர அதற்கான மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஹால்மார்க் தர சான்று வழங்கக்கூடிய 167 மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் தான் நகைகள் தரம் ஆய்வு செய்யப்பட்டு முத்திரை வழங்கப்படும். குறைந்த அளவில் மையங்கள் இருப்பதால் அதனை அதிகரிக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் 45 ஹால்மார்க் தர மையங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள அனைத்து நகைக்கடைகளும் இவற்றில் தான் தங்கத்தின் தரத்தை உறுதி செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

Tags:    

Similar News