தமிழ்நாடு

பா.ஜ.க.-வுக்கு bye bye.. பட்டாசு வெடித்து அ.தி.மு.க. அலப்பறை..

Published On 2023-09-25 12:55 GMT   |   Update On 2023-09-25 12:55 GMT
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.
  • அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்தது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அ.தி.மு.க. அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட துவங்கியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News