தமிழ்நாடு

வருகிற 11-ந் தேதி காலையில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

Published On 2023-06-06 10:53 GMT   |   Update On 2023-06-06 10:53 GMT
  • சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமித்ஷா காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.
  • வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார்.

சென்னை:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (8-ந்தேதி) சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ந் தேதி (ஞாயிறு) தமிழகம் வருகிறார்.

11-ந்தேதி காலையில் டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து பள்ளிக்கரணை வருகிறார்.

அங்கு தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது.

எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது. வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்

சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.

வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

Similar News