மணமகளை மணமேடையில் அடித்து துவைத்த மணமகன்
- டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமக்கள் ஒருவரையொருவர் சரமாரியாக அடித்துக் கொள்கிறார்கள்.
- உறவினர்கள் மணமக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வது போன்றும் காட்சிகள் உள்ளன.
ஆடம்பர திருமணங்கள் குறித்த வீடியோக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் திருமண விழாக்களில் நடக்கும் சண்டைகளும் சமூக வலைதளங்களில் பரவி விடும். வழக்கமாக, மணமக்களின் விருந்தினர்கள் தான் சண்டை போடுவார்கள். ஆனால் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமக்கள் ஒருவரையொருவர் சரமாரியாக அடித்துக் கொள்கிறார்கள். இந்த வீடியோவில் மணமகன் மணப்பெண்ணுக்கு இனிப்பு கொடுக்க முயற்சி செய்வது போல தெரிகிறது. மணமகள் அதை வேண்டாம் என்று மறுத்து மாப்பிள்ளையின் கையை தள்ளி விடுகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் கோபத்தில் மணமகளை அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து செல்வது போன்றும், உறவினர்கள் மணமக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது விவாகரத்து செய்ய விரும்புகிறீர்களா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.