செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- தமிழகத்தில் இன்றும், நாளையும் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
- ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் (26-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒருநாள் தாமதமாக 27-ந்தேதி உருவாகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 29-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.