தமிழ்நாடு

2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-06-10 12:29 IST   |   Update On 2022-06-10 16:12:00 IST
  • ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
  • தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

4,880 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

Similar News