தமிழ்நாடு

பெண் காவலரை தள்ளி விட்ட விசிக தொண்டர்களால் பரபரப்பு

Published On 2024-10-03 08:35 IST   |   Update On 2024-10-03 08:35:00 IST
  • மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
  • போலீசாருக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

இதற்கிடையே, பெண் காவலரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தள்ளிவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாநாடு ஆரம்பித்ததும் ஒரு பகுதியில் அதிகளவில் கூடிய தொண்டர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் பெண் காவலர்களுக்கும் சிக்கிக் கொண்டனர்.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற காரை வழிமறித்த பெண் காவலரை விசிகவின் பெண் மற்றும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து தள்ளி விட்ட சம்பவமும் நடந்துள்ளது.

Tags:    

Similar News