தமிழ்நாடு

டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிளில் சென்ற காட்சி


திருவள்ளூர் அருகே போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

Published On 2022-07-10 14:09 IST   |   Update On 2022-07-10 14:09:00 IST
  • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம்.
  • டி.ஜி.பி சைலேந்திரபாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்:

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம்.

இன்று காலை அவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து திருவள்ளூர் பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் சென்றார்.

அப்போது செல்லும் வழியில் டி.ஜி.பி சைலேந்திர பாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அங்கிருந்த கோப்புகளையும் பார்வையிட்டு பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் ஊத்துக்கோட்டையை அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்குகள் காப்பகத்தை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்குச் சென்றார்.

Tags:    

Similar News