தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அரசு மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்- உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

Published On 2023-09-25 02:26 IST   |   Update On 2023-09-25 02:49:00 IST
  • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
  • இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீடீரென அங்கு உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.


மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார்.

ஆய்வுகளின் அடிப்படையில் கோப்புகளில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின் வார்டன் முருகன் என்பவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News