தமிழ்நாடு
கோவை, நீலகிரியில் மிக கனமழை நீடிக்கும்
- சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் காங்கயம் 8 செ.மீட்டரும், திருப்பூர், ஆவடி, சூலூர், பண்ருட்டி, ராசிபிரம், வானமாதேவி தலா 7 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.