கார் மீது கவிந்த லாரி... அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் இல்லை
- 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதியம் கொடைக்கானல் வத்தலகுண்டு மலை சாலையில் மூளையார் என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.