அ.தி.மு.க. கொடி இல்லாத காரில் பயணம் செய்த ஓ.பி.எஸ்.
- சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடி இல்லாமல் வரவேற்பளித்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில், கலந்து ஆலோசிக்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க.வின் கட்சி கொடி, பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சிங்கப்பூருக்கு சென்றிருந்த, ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க. கொடி இல்லாமல் வரவேற்பளித்தனர்.
அதன் பின்பு வழக்கமாக ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி இல்லாமல், சென்னை விமான நிலையத்திலிருந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு அவர் புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில், கலந்து ஆலோசிக்கிறார்.
அதோடு நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை ஐகோர்ட்டு, தனி நீதிபதி வழங்கிய கொடி பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.