தமிழ்நாடு

மக்களுக்கு எதிராக செயல்படுவதால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்- கே.எஸ்.அழகிரி அறிக்கை

Published On 2022-08-26 14:58 IST   |   Update On 2022-08-26 16:42:00 IST
  • கவர்னர் பெயரளவுக்கான நிர்வாகத் தலைவர் தான்.
  • மக்களின் பிரச்சினைகள் குறித்து தான் கவர்னர் சிந்திக்க வேண்டும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக காட்டியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. திருக்குறளில் ஜி.யு. போப் அளித்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

அவர் தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் வகையில் செயல்படும் கவர்னர் தமிழகத்துக்கு தேவைதானா? தமிழர்களுக்கும் தமிழர் நலனுக்கும் விரோதமாக செயல்படும் கவர்னர் தமிழகத்துக்கு தேவைதானா?

கவர்னர் பெயரளவுக்கான நிர்வாகத் தலைவர் தான். மக்களின் பிரச்சினைகள் குறித்து தான் கவர்னர் சிந்திக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆட்சியமைக்கின்றனர், மசோதாவை நிறைவேற்றுகின்றனர்.

அதை ஆதரிக்காமல், மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாலும், வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாலும், அவரை உடனே திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News