தமிழ்நாடு

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை- குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

Published On 2022-07-11 07:06 GMT   |   Update On 2022-07-11 08:51 GMT
  • தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கும் மேலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
  • குண்டாறு அணையில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

சேர்வலாறு, கன்னடியன் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டரும், அம்பையில் 6 மில்லிமீட்டரும், சேரன்மாகாதேவி, களக்காடு பகுதிகளில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கும் மேலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளான அடவிநயினார், குண்டாறு, கடனா அணை பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

அடவிநயினாரில் அதிகபட்சமாக 21 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தொடர்விடுமுறை காரணமாக இன்றும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News