தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் முதலமைச்சரை சந்தித்தார்.
- கூட்டணியில் ஏற்பட்டுள்ள சில முரண்களை களையவும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விசிக நடத்தும் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக திருமாவளவன் கூறி இருந்தார்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் முதலமைச்சரை சந்தித்தார்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்றுவதற்கு திமுக-வை வலியுறுத்த முதலமைச்சரை சந்திப்பதாகவும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சில முரண்களை களையவும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.