தமிழ்நாடு

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Published On 2024-08-11 03:22 GMT   |   Update On 2024-08-11 03:22 GMT
  • வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • நான்கு மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்னர்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்றனர். அப்போது 4 படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் தாக்கியுள்ளனர்.

கோடியக்கரை அருகே அரங்கேறிய இந்த சம்பவத்தின் போது மீனவர்களின் படகுகளில் இருந்த 700 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றனர்.

கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் காயமடைந்த சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன், செல்வ கிருஷ்ணன் என நான்கு மீனவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து, வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News