தமிழ்நாடு

நல் ஆளுமை விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

Published On 2023-08-13 13:38 GMT   |   Update On 2023-08-13 13:38 GMT
  • சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜனுக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது
  • சுதந்திர தினத்தன்று ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார்

சென்னை:

பல்வேறு துறைகளுக்கான தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜூக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது மகப்பேறு இறப்புகளை குறைத்தல் குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜனுக்கும் நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளுக்கு பிரத்யகே பிரிவு அமைத்து சிகிச்சை அளித்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கோவை எஸ்பி (புறநகர்) பத்ரிநாராயணனுககு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலி, மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணித்ததற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கும் நல்லலாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளை சுதந்திர தினத்தன்று ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News