தமிழ்நாடு
சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா உறுதி: ஒருவர் உயிரிழப்பு
- தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா தொற்று
- கடந்த 24 மணி நேரத்தில் 33,058 பேர்களிடம் கொரோனா பரிசோதனை.
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 121- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 2,682 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 058- ஆகும். தலைநகர் சென்னையில் 618- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.