தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் குளிக்க திரண்ட சுற்றுலா பயணிகள்

Published On 2023-09-08 10:47 IST   |   Update On 2023-09-08 10:48:00 IST
  • குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
  • சுரண்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தொடர்ந்து சீரான அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமின்றி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்ததன் காரணமாக தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் அதில் குளிப்பதற்காக கடந்த நாட்களை விட இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்பட்டது.

Tags:    

Similar News