தமிழ்நாடு
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் - கட்சிக் கொடி விரைவில் அறிமுகம்
- தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- தவெக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.