தமிழ்நாடு

(கோப்பு படம்)

மோடி நினைக்கிற மாதிரி இது எடப்பாடி ஆட்சி இல்ல- உதயநிதி ஸ்டாலின்

Published On 2022-11-20 21:57 IST   |   Update On 2022-11-20 22:52:00 IST
  • இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி.
  • இங்கு வரும் போது தமிழில் பேசுவார். ஆனால் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை.

சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

இங்கே பேசியவர்கள் சொன்னார்கள், பாராளுமன்ற தேர்தலே நான் பிரச்சாரம் செய்ததால் வெற்றி பெற்றோம் என்று. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, வெற்றிக்கெல்லாம் ஒரே காரணம் கலைஞர். கலைஞர் வழியில் வந்த நமது தலைவர். அந்த வெற்றி கண்டிப்பாக தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மோடி இங்கு வரும் போது தமிழில் பேசுவார். திருக்குறள் சொல்லுவார். ஆனால் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை, இந்தியை கொண்டு வந்து திணிப்பார். நான் மோடியிடம் சொல்ல விரும்புகிறேன், இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைக்கும் மாதிரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியோ கிடையாது, இது திராவிட மாடல் ஆட்சி. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி.

இங்கிருந்து போய் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறார். தமிழ் நாட்டிற்கு இதுவரை என்ன செய்திருக்கீங்க? ஒன்னுமே செய்யல. நீங்கள் ஒவ்வொருமுறையும் எங்களது மாநில உரிமைகளை பறிக்கும் போது அதற்கு குரல் கொடுக்கிற, இந்தியாவிலேயே உங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்ற தலைவர் தளபதி மட்டும்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News