தமிழ்நாடு
நாட்டுத்தொண்டும் மொழித்தொண்டும் இரு கண்கள் என வாழ்ந்திட்ட பெருமகனார் வ.உ.சி.- மு.க.ஸ்டாலின்
- ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!
- பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்!
சென்னை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,
ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!
நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.