தமிழ்நாடு

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு

Published On 2023-07-19 03:30 GMT   |   Update On 2023-07-19 03:30 GMT
  • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன.
  • குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்றது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. இதனை வனத்துறையினர் கண்காணித்து வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி, யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்.நகர் அருகே ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்றது.

அப்போது அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் யானையை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை திடீரென திரும்பி வந்து, சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதனால் அச்சம் அடைந்த அவர்கள் அலறியடித்தபடி காருக்குள் ஏறி உயிர் தப்பினர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News