தமிழ்நாடு
சென்னை-திருச்சி இடையே கூடுதல் விமான சேவை நாளை தொடக்கம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னை - திருச்சி இடையே தினசரி விமான சேவையை நாளை தொடங்குகிறது.
- இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்புகளும் உள்ளன.
சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு, இண்டிகோ நிறுவனம் மட்டுமே தினசரி சேவைகளை வழங்கி வந்தது. இதனால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்காக இருந்தது. எனவே கூடுதல் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னை - திருச்சி இடையே தினசரி விமான சேவையை நாளை தொடங்குகிறது.
சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9.15 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்புகளும் உள்ளன.