தமிழ்நாடு
அண்ணா பல்கலை. வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
- அ.தி.மு.க.வின் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- மாணவர்களால் மாணவர்களுக்காக ஒன்றிணைவோம் என்ற பேட்ஜ் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகம் முன்பு அ.தி.மு.க.வின் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலை. முன்பாக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்த நிலையில் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசாரர் கைது செய்தனர்.
மாணவர்களால் மாணவர்களுக்காக ஒன்றிணைவோம் என்ற பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.