பதில் சொல்... யார் அந்த சார்... கோஷமிட்டபடி சட்டசபையில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க.வினர்
- தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகக்கூறிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார்.
- பதாகைகளை ஏந்தியபடி சட்டசபையை விட்டு அ.தி.மு.க.வினர் வெளியேறினர்.
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சூழ்ந்து கொண்டு அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகக்கூறிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார்.
இந்நிலையில் சட்டசபையில் ஆளுநரை உரையாற்ற விடாமல் முழக்கமிட்ட அ.தி.மு.க.வினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பதாகைகளை ஏந்தியபடி சட்டசபையை விட்டு அ.தி.மு.க.வினர் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். 'பதில் சொல்... பதில் சொல்... யார் அந்த சார் என பதில் சொல்,' என கோஷமிட்டபடி சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேறினர்.