தமிழ்நாடு
சட்டசபை விவகாரம்- விளக்கத்தை நீக்கிய ஆளுநர் மாளிகை
- தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
- ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,
அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
ஆளுநர் மாளிகை விளக்கத்தை அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை நீக்கி உள்ளது.