தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணம்- அமைச்சர் தென்னரசு விளக்கம்

Published On 2024-12-29 16:36 GMT   |   Update On 2024-12-29 16:36 GMT
  • குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
  • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர், "கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News