அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதலமைச்சர் பதில்
- நாங்கள் உங்களை விட கம்மியாக படித்தவர்கள்தான்.
- எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எங்களுக்கு எங்களது தலைவர் இருக்கிறார்.
சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசும் போது, நிதி நிலை அறிக்கையில் உறுப்பினர் பேசும்போது ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியது சம்பந்தமாக நான் கேட்ட கேள்வி இந்த நிதி ஆண்டுக்கு முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதி என்றார்.
இதை முதலில் கூறி இருந்தால் தெரிந்திருக்கும். நாங்கள் உங்களை விட கம்மியாக படித்தவர்கள்தான். கூட்டல் கணக்கு எங்களுக்கு சரியாக தெரிந்தாலும் கூட நீங்கள் இன்னொற்றை சொன்னீர்கள். வேறு ஒரு கூட்டல் கணக்கில் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எங்களுக்கு எங்களது தலைவர் இருக்கிறார். சாதாரணமான ஒரு கிராமத்தில் இருந்து வந்த அவர் இந்த அளவுக்கு இயக்கத்தை வலிமையோடு நடத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால், எந்த கூட்டல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீங்கள் (அ.தி.மு.க.), ஏமாறாமல் இருந்தால் எங்களது வாழ்த்துகள்" என்றார்.