பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம்- அய்யாக்கண்ணு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது
- மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
- போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருச்சி:
விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.