தமிழ்நாடு
விளைநிலங்களில் கொட்டப்பட்ட கெமிக்கல் கழிவுகள்.. இரவில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
- 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
- அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விவசாய நிலத்தில் காலாவதியான ரசாயனங்களை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர். 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டனர்.
கெமிக்கல் பாக்ஸ் மற்றும் கெமிக்கல் பேரல்களை விவசாய நிலங்களில் கொட்டி சென்றுள்ளதாகவும் ரசாயனங்களை கொட்டி சென்றது யார் என்று தெரியவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.