தமிழ்நாடு

'அமுதக் கரங்கள்' திட்டத்தை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்

Published On 2025-02-20 08:49 IST   |   Update On 2025-02-20 08:49:00 IST
  • மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.
  • நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் 'அமுதக் கரங்கள்' திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் 'அமுதக் கரங்கள்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News