தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி அரசு விடுமுறை
- தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து மனு மீதான பரிசீலனையும் முடிந்துள்ளது. இடைத்தேர்தல் மொத்தம் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை எதிர்நோக்கி அரசு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.