FAIR DELIMITATION : இது வடக்கு, தெற்கு இடையேயான போர் கிடையாது - டி.கே.சிவகுமார்
- நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
- ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"