தமிழ்நாடு
தின்னர் தொழிற்சாலையில் தீ விபத்து- பள்ளிக்கும் தீ பரவியதால் அணைக்கும் பணி தீவிரம்
- ரசாயனம் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதுடன் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை திருமுல்லைவாயில் சுதர்சன் நகர் பகுதியில் உள்ள தின்னர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனம் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதுடன் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
தின்னர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகே உள்ள தனியார் பள்ளிக்கும் பரவியது. பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.