மனைவியுடன் தகராறு: கிணற்றில் தள்ளப்பட்ட பைக்கை மீட்க சென்ற கணவருடன் சேர்ந்து 4 வாலிபர்கள் பலியான சோகம்
- மனைவி ரூபா அலறல் சத்தம் கேட்டு 4 பேர் கர்மாலியை மீட்க முயன்றனர்.
- தகவலின் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் சார்வாஹா கிராமத்தில் உள்ள சுந்தர் கர்மாலி (27) என்பவருக்கும் அவரது மனைவி ரூபா தேவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஆத்திரமடைந்த கர்மாலி தனது மோட்டார் சைக்கிளை கிணற்றில் தள்ளி விட்டார்.
பின்னர் உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் அவர் மேலே வரவில்லை. அவரது மனைவி ரூபா அலறல் சத்தம் கேட்டு 4 பேர் கர்மாலியை மீட்க முயன்றனர்.
உடனே அந்த 4 பேரும் கிணற்றுக்குள் குதித்தனர். ஆனால் அதன்பின்னர் அந்த 4 பேரும் மேலே வரவில்லை. அவர்களும் உயிரிழந்தனர்.
தகவலின் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நால்வரும் ராகுல் கர்மாலி, வினய் கர்மாலி, பங்கஜ் கர்மாலி மற்றும் சூரஜ் பூயான் என அடையாளம் காணப்பட்டனர்.
கிணறு மூடப்பட்டு அதன் அருகே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கிணற்றுக்குள் குதித்தவர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.