கள்ளத்துப்பாக்கியால் சுடப்பட்ட வனப்பாதுகாப்பாளருக்கு சிகிச்சை அளித்தபோது எடுத்தப்படம்.
சின்னசேலம் அருகே வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு
- பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் மற்றும் பாக்கம்பாடி இந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கால சமுத்திரம் பகுதியில் இருந்து பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கள்ளத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்களை மடக்கி பிடித்தபோது வேல்முருகனின் காலில் கள்ள துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரை பிடித்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அந்த 2 பேரின் பெயர் செல்லக்கண்ணு, சரவணன் எனவும், இவர்கள் எதற்காக கள்ளத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்பது போன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.