தமிழ்நாடு

ஜிபிஎஸ் நோய் பாதிப்பு- சிறுவன் உயிரிழப்பு

Published On 2025-02-04 09:13 IST   |   Update On 2025-02-04 09:13:00 IST
  • சிறுவனின் கால்கள் திடீரென உணர்விழந்து போனது.
  • திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் மகன் வைத்திஸ்வரன் (9). இவர் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவனின் கால்கள் திடீரென உணர்விழந்து போனது. இதையடுத்து அவன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

பரிசோதனையில் சிறுவன் ஜிபிஎஸ் என்னும் அரிய வகை நோயால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாக்டீரியாக்களால் பரவக்கூடிய இந்த நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News