தமிழ்நாடு

உரையை புறக்கணித்த ஆளுநர்- சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் துரைமுருகன்

Published On 2025-01-06 11:37 IST   |   Update On 2025-01-06 13:22:00 IST
  • ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும் உரைக்கு பின்பு தேசிய கீதம் பாடப்படும் என முன்னதாகவே விளக்கம் தரப்பட்டுள்ளது.
  • தேசிய கீதத்தின் மீது பெரும் மதிப்பை தமிழக சட்டசபை கொண்டுள்ளது.

தமிழக சட்டசபையில் உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* 2023-ம் ஆண்டு உரையில் சில வார்த்தைகளை விடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். அப்போது சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

* கடந்தாண்டும் இதேபோல் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக்கூறி ஆளுநர் உரையை புறக்கணித்தார்.

* ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும் உரைக்கு பின்பு தேசிய கீதம் பாடப்படும் என முன்னதாகவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

* கடந்தாண்டு சர்ச்சை எழுந்தபோதும் எழுத்துப்பூர்வமாக அவை நடவடிக்கை கூறப்பட்டும் ஆளுநர் உரையை புறக்கணித்தார்.

* ஆளுநர் பதவி உள்ளவரை அப்பதவியில் இருப்பவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என கருத்து கொண்டவர் முதலமைச்சர்.

* தேசிய கீதத்தின் மீது பெரும் மதிப்பை தமிழக சட்டசபை கொண்டுள்ளது என்று கூறினார்.

ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும், வேறு எவையும் இடம் பெறாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் உரை தொடர்பாக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News