தமிழ்நாடு

தமிழகத்தில் இந்த ஆண்டு 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணையும்- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2025-03-20 13:47 IST   |   Update On 2025-03-20 13:47:00 IST
  • 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
  • தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கேட்ட கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

இந்த ஆண்டு தமிழகத்தில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், ஹசன் மவுலானா, தரமணி பகுதியில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதிபடுவதாகவும் அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது எனவே நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதில் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News